லெஜன்ட்ஸ் லீக்கில் 5 இலங்கை வீரர்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் கட்டாரில் நடைபெறவுள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடரில் களமிறங்கும் ஏசியா லயன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் ஐவர் இடம்பிடித்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் 2ஆவது லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடர் மார்ச் 10ஆம் திகதி முதல் மார்ச் 20ஆம் திகதி வரை கட்டார் தலைநகர் டோஹாவில் உள்ள ஏசியன் டவர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் உபுல் தரங்க, திலகரட்ன டில்ஷான், திசர பெரேரா, தில்ஹார பெர்னாண்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் ஏசியா லயன்ஸ் அணிக்காக ஆடவுள்ளனர்.

கடந்த ஆண்டைப் போன்று இம்முறையும் ஏசியா லயன்ஸ் அணியின் தலைவராக பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வீரர் மிஸ்பா உல் ஹக் செயல்படவுள்ளார்.

இம்முறை போட்டித் தொடரில் ஏசியா லயன்ஸுடன் இந்தியா மஹாராஜாஸ் மற்றும் வேர்ல்ட் ஜயண்ட்ஸ் ஆகிய 3 அணிகள் களமிறங்கவுள்ளன.

Related Articles

Latest Articles