வகுப்பறையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்

கனடாவில் உயர்நிலை பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.அத்துடன் இந்த சம்பவத்தை அறிந்து அதனை தடுக்க வந்த ஆசிரியரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியரை மாணவன் திடீரென கத்தியால் குத்தியதை கண்ட சக மாணவர்கள் பயத்தில் அலறினர். சத்தம் கேட்டு வந்த மற்றொரு ஆசிரியரையும் குறித்த மாணவர் குத்தியுள்ளார். மேலும் அவர் தடுக்க முயன்றதால் மாணவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாணவர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பாடசாலை சிறிது நேரம் பூட்டப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் மூடப்பட்டது. ஆசிரியர்கள் மீது மாணவன் கத்தியால் குத்தியமை பாடசாலை மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles