” வங்கி விடுமுறை குறித்து வீண் அச்சம் வேண்டாம்”

மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கை வைக்க முடியாது என ஜனாதிபதியின் ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் தெளிவாக கூறியுள்ளதாகவும், எனவே, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் கூறினார்.

வங்கி விடுமுறை வழங்குவது தொடர்பில் நாட்டில் தேவையற்ற கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அஸ்வசும போன்ற திட்டங்களை அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் உள்ளடக்கக் கூடாது என தெரிவித்த காரியவசம், அனைத்தும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles