வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
“முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் எனக் கூறப்படும் இளைஞரின் மரணத்தக்கு நீதிகோரி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை தெரிவிக்கின்றேன்.” என்று அறிக்கையொன்றின் ஊடாக இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
‘ நீதிக்காகவும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு எனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்துகின்றேன்.
“யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிக்கின்றது. இப்படியான சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.” எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.