வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா

வடகொரியா வழங்கிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்கா.

அத்துடன், ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரில் அண்மைக்காலமாக இருநாடுகளும் தங்களுடைய தாக்குதல் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து வருகின்றன.

இதன்படி நேற்று முன் தினம் உக்ரைனின் கீவ், கார்கீவ் நகரங்களை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் ஊடுருவின.

ரஷ்யா தனது ஆயுத கிட்டங்கில் பலம் வாய்ந்த கின்சால் ஏவுகணைகள், உக்ரைன் நகரங்கள் மீது குறிவைத்து சரமாரியாக வீசப்பட்டன. ரஷ்யா தன்னிடம் உள்ள பலம் வாய்ந்த கின்சால் ஏவுகணைகளை, உக்ரைன் நகரங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் இந்த ஏவுகணைகள், உக்ரைனின் வான்பாதுகாப்பு தளவாடங்களை மீறி கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.

இந்த தாக்குதலில் வானுயர கட்டடங்கள் சரிந்து விழுந்து நொறுங்கின. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா சமீபத்தில் ரஷியாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்களை வழங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

” ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா ஏற்கின்றது. ரஷ்யாவிற்கு வட கொரியாவின் ஆயுத பரிமாற்றம் குறித்த தீர்மானத்துக்கு எதிரானது. ” – என்றார்.

“ஈரான் ரஷ்யாவுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கவில்லை, எனினும், ஈரானிடம் இருந்து ஏவுகணை அமைப்புகளை ரஷ்யா வாங்க விரும்புவதாக வாஷிங்டன் நம்புகிறது. உக்ரைனுக்கு எதிரான டிரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களுக்காக மாஸ்கோ ஈரானை பெரிதும் நம்பியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles