வடக்கு காணி பிரச்சினை: 23 ஆம் திகதி விசேட கூட்டம்!

காணி விவகாரம் தொடர்பில் மே 23 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது என காணி அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமா அதிபர், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய வகையிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய காணி  அமைச்சர்,

” மேற்படி கலந்துரையாடலின்போது இறுதி முடிவை எடுக்கலாம். மக்களின் காணிகளை அவர்களுக்கு விரைவில் கையளிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு உள்ளது. அப்பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகளின் ஆலோசனைகளும் பெறப்படும். மக்களின் காணியை சுவீகரிக்கும் எவ்வித நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை.

இதனை இடைநிறுத்துவோம் என்ற தீர்மானம் 23 ஆம் திகதி கூட்டத்தில் எடுக்கப்பட்டால் அதனை செய்வதற்கும் நாம் தயார்.” – என்றார்.

Related Articles

Latest Articles