வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டாரா?

முன்னாள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவரது ஊடகப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் திட்டமிட்டு பரப்பப்பட்டது எனவும் இது சமூக வலைத்தளத்தில் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு, போலியான ஒரு விம்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் பல அதிகாரிகள், அரசியல்வாதிகள் கைதுசெய்யப்படுவார் என்று தகவல்களைப் பரவி வரும் நிலையில், இந்தச் செய்தியும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், முன்னாள் வட மாகாண ஆளுநர் தனது சேவைக் காலத்தில் தனது பணியை திறம்படவும், நேர்த்தியாக முன்னெடுத்த அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles