வடமேல் மாகாண ஆளுநரின் உயிரை பலியெடுத்த ‘கொரோனா’

வடமேல்மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83 ஆவது வயதில் காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரான ராஜா கொல்லுரே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராகவும் பதவி வகித்துள்ளார்.

ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். எனினும், நீதிமன்றத்தை நாடி இதற்கு இடைக்கால தடை உத்தரவை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles