வடிவேல் சுரேஷின் ஆதரவு யாருக்கு? 12 ஆம் திகதி முடிவு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தான் யாருக்கு ஆதரவளிப்பது என எதிர்வரும் 12 ம் திகதி அறிவிக்கவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணங்களையும் செலுத்தி வருகின்றனர்.

இருப்பினும் இது சம்பந்தமாகவும் தான் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் தனது தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க அங்கத்தவர்களிடம் கலந்து ஆலோசித்து எதிர்வரும் 12 ம் திகதி தான் யாருக்கு ஆதரவளிப்பது என அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles