வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ஆலோசகரானது மலையகத்துக்கு பெருமை – செந்தில் தொண்டமான் வாழ்த்து

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலையக மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என குடியுரிமை பறிக்கப்பட்டு நாடாற்ற சமூகமாக மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்ட போதிலும், இன்று நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசகராக மலையக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் பெருமையளிக்கும் விடயமாகும்.

வடிவேல் சுரேஷ் தனது அரசியல் வாழ்க்கையை இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஆரம்பித்து, மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் பாசறையில் வளர்ந்து, மலையகத்தில் மிக முக்கியமான தொழிற்சங்கமான LJW யின் பொதுச் செயலாளராக இருந்து இன்று ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை தனது கடின உழைப்பிற்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக கருதப்படுகிறது.

மேலும் அவருடைய இப்பதவி காலத்தில் மலையக மக்களுக்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles