கண்டியிலிருந்து பதுளை நோக்கி இன்று (23) காலை பயணித்த சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளதாக நானு ஒயா ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு தடம்புரண்ட சரக்கு ரயிலையும், ரயில் பாதையையும் சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பதுளையில் இருந்து கொழும்புக்கு காலை செல்லும் பயணிகள் ரயில் சேவை தாமதமாகும் எனவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கௌசல்யா