வட்டவளை, குயில்வத்தை பகுதியில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு ஊர்கொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் குறித்த மாணவன் அண்மையில் சென்றுள்ளார்.
மீண்டும் ஊர் திரும்பும் வழியில் அவரிடம் எழுமாறாக பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிசிஆர் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் குறித்த மாணவன் நேற்று பாடசாலைக்கு சென்றுள்ளார். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார். இன்று அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலை வளாகம் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
