வன்முறையால் எடுக்கப்படும் தீர்வு நல்ல தீர்வாக அமையாது. வன்முறையால் எதையும் சாதித்து விடவும் முடியாது. அஹிம்சை வழியில் பேசி எடுக்கப்படும் தீர்வே நல்ல முடிவாக அமையும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போது நகர் புரத்தில் மாத்திரமல்ல தோட்ட புரங்களிலும் அடக்கு முறைகளை கொண்டுவருகின்றார்கள். இதற்கு நாம் இடமளிக்க கூடாது.கந்தப்பளை மாகுடுகல தோட்டத்தில் ஓய்வுபெற்ற 7 இராணுவ வீரர்களை தொழிலுக்கு அமர்த்தியுள்ளார்கள். இது எமது மக்கள் மத்தியில் அச்சதை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டங்களில் இராணுவ வீரர்களை தொழிலுக்கு அமர்த்த கூடாதென பாராளு மன்றத்திலும் கூறியுள்ளேன். அத்தோடு கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரனவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் எல்லாமே நிறைவேற்றப்படாவிட்டாலும் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படு கின்றன.
உதாரணமாக பிரதமர் மஹிந்தராஜபக்ச பாராளுமன்றத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும். என்று கூறியதாலே
இன்று ஆயிரம் ரூபா சம்பளம் தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டும். என அரச வர்த்தமாணியில் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கூடாது என்பதற்காக சரித்திரத்திலே முதன் முறையாக தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராக தோட்டத்துறைமார்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லையென கூறி அட்டனிலும்
பண்டாரவலையிலும் பாதையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இம் மாதிரியான எதிர்ப்புககளுக்கு மத்தியில் அகிம்ஷை வழியில் அனைத்து தொழிற்சங்கங்ளும் ஒன்றிணைந்து எமது தொழிலாளர்களின் உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றெடுக்க முன்வரவேண்டும்.
தோட்டத்தொழிலாளர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அர்த்தம் இல்லை. தொழிலாளர்கள் ஒரு சில விடயங்களில் அவசரப்பட்டு ஆத்திர மடைந்து செய்யும் செயலால் பின்னர் அவதிப்படுகின்றார்கள். தூண்டிவிடுபவர் களும் தொழிலாளர்களுக்கு துணைப் போவதில்லை. தொழிலாளர்களின்போராட்டதை நான் கொச்சப்படுத்த வில்லை . ஆனாலும் நாம் எதை செய்தாலும் ஆத்திரமடையாமல் சிந்தித்து செயல்படவேண்டும். என கூறினார்.
