கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை நகரில் கண்டி – நுவரெலியா பிரதான பாதையில் மகாவலி கங்கையினை ஊடறுத்து காணப்படும் பழைய பாலமானது சேதமடைந்து, உடைந்து விழக்கூடிய ஆபத்தானநிலையில் காணப்படுகின்றது.
இப்பாலமானது 1925 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, 1926 ஜுலை 2 ஆம் திகதி அப்போது ஆளுனராக இருந்த சேர் ருச்கிளிபோர்ட்வால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்துடன் இணைந்தாக ஜப்பான நாட்டின் உதவியுடன் 99 மீற்றர் தூரம் 32.8 மீற்றர் உயரத்தில் புதிய பாலம் ஒன்று அமைக்கபட்டு 2003 ஆகஸ்ட் மாதம் வைபவ ரீதியாக திறந்து வைக்கபட்டுள்ளது.
இப்பாலத்துக்கான நிர்மாணப்பணிகள் இடம்பெறுகையில் கடமையில் இருந்த ஜப்பான் நாட்டு பொறியியலாளர் நொபுகிரோ டகாயாநகிமீது பாரம் தூக்கயின் ஒரு பகுதி கழன்று விழுந்ததால் அவர் 04.02.2003 சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் நினைவாக நினைவு சின்னம் ஒன்றும் இங்கு அமைக்கபட்டுள்ளது.
இரண்டு பாலங்களும் ஒரே இடத்தில் சமாந்தரமாக இருக்கும் நிலையில் பழைய பாலத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் ஊடாகவே போக்குவரத்து இடம்பெறுகின்றது.
பழைய பாலம் பாதசாரிகளின் பாவனையுடன் ஒரு காட்சி பொருளாக காணப்படுகின்றது. இந்த பாலம் முற்றிலும் இரும்பாலனது. தற்போது இந்த இரும்புகள் உக்கிய நிலையில் பாதுகாப்பு அற்று காணப்படுகின்றது.
நாளாந்தம் சுற்றுலா நோக்கம் கொண்டு வரும் சுற்றுலா பயணிகளும் கம்பளை நகர பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களும் பொது மக்களும் தங்களின் பொழுதை போக்குவதற்கும் மகாவலி ஆற்றை பார்வையிடுவதற்கும் இந்த பாலத்தை பயன்படுத்தி வரும் நிலையில் இதனை பாதுகாப்பானதாக திருத்தி அமைக்க வேண்டியது கடமையாகும்.
குறிப்பாக இந்த பாலமானது இலங்கைளின் சுற்றுலாதுறைக்கு ஒரு பொக்கிஷமாகும். இலங்கை வரும் வெளிநாட்டு மற்றும் உள்ளாட்டு சுற்றுலா பிரயாணிகளை கவர்ந்தது. மிகவும் அழகானதாகவும் தொன்மையானதாகவும் காணப்படுகின்றது.
இந்த பாலத்தின் மேல் 1940 ஆண்டு கம்பளையில் ஏற்பட்ட பாரிய வெள்ள பெருக்கு காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியுள்ளது. இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக அனைவரினாலும் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இந்த பாலத்தினையும் இதனை பாவிப்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
எனவே இதனை கருத்திற் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை பாலத்தின் ஆபத்தான பகுதிகளை திருத்தி அமைக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இதனையும் மகாவலி கங்கையையும் பார்ப்பதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்