மாத்தறையில் இருந்து மட்டக்களப்புக்கு விற்பனைக்காகக் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியன வலம்புரிச் சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டு. கல்குடா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு விசேட அதிரடிப் படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளனர் என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
தாண்டியடி விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசேட அதிரடிப் படையின் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோ சனைக்கமைய அம்பாறை – மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளர் வாவிடவிதானவின் வழிகாட்டலின் கீழ் தாண்டியடி விசேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி தலை மையிலான குழுவினர் நேற்றிரவு கல்குடா தபால் கந்தோ ருக்கு அருகாமையில் கண்காணிப்பில் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
