வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்க முற்பட்ட இருவர் ஹட்டனில் கைது!

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11.02.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் – கொழும்பு வீதியில் வசிக்கும் சந்தேக நபர், வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்படுகின்றார் என இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விசேட அதிரடிப்படைக்கு இவ்விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டு, சந்தேக நபரை கைது செய்வதற்கு கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலம்புரி சங்கை வாங்குவதற்காக செல்லும் பாணியிலேயே சந்தேக நபர்கள் இருவரையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் அட்டன் மற்றும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதான சந்தேக நபரின் வீட்டிலேயே வலம்புரி சங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது எனவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles