வலுவான நிலையில் ஆஸி., இலங்கை உறவு!

அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான இராஜதந்திர விஜயத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஷை வரவேற்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய உத்தியோகபூர்வ தூதரக இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளைச் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

சவாலான சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்த நம்பிக்கைக்குரிய எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பில் ஆஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் போல் ஸ்டீவன்ஸ், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வெளிவிவகாரம் வர்த்தகத் திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை பாதுகாப்புப் பிரிவின் பிரதம அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles