வளி மாசுபாடு அளவு வழமைக்கு திரும்பியுள்ளது

வளிமண்டலத்தில் வளி மாசு தரக்குறியீடு வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இன்று  அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூறாவளியால் தூசு அடங்கிய காற்று இலங்கை நோக்கி வீசுவதால்  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்றிலும் பார்க்க குறைந்தளவில்  வளி மாசு நிலை இன்று நிவுவதாக பலரும் தெரிவித்தனர்.

நாட்டின் சில பகுதிகளில் வளி மாசு தரக்குறியீடு நேற்று 150 முதல் 200 புள்ளிகள் அளவில் அதிகரித்திருந்தது.

இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் உடல் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத நிலையை அடைந்துள்ளதால், சுவாசக்கோளாறு உடையவர்கள்  எதிர்வரும் நாட்களுக்கு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles