வவுனியா விபத்தில் மலையக பல்கலை மாணவி பலி!

வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் மலையக பல்கலைக்கழக மாணவியொருவரும் உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, நொச்சுமோட்டை பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles