வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல்

வாகன இறக்குமதிக்கான அனுமதியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

முதற்கட்டத்தில் வர்த்தக மற்றும் போக்குவரத்து சேவைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதிக்கான அனுமதியை 2025 முதல் காலாண்டில் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles