‘வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாதவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்’

பெருந்தோட்ட பகுதிகளில் வாக்காளர் இடாப்பில் பெயர் இடம் பெறாதவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசிகள் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்ட பகுதிகளில் தொற்றுநீக்கி தெளிக்கும் பணிகள் குறைவடைந்துள்ளன. கொரோனா தொடர்பான விழிப்புணர்வும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது. உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக தொற்றுநீக்கி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் அந்த பணிகளை பெருந்தோட்ட பகுதிகளில் கஅந்த நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதில்லை.

ஆகவே கொரோனா தடுப்பு பணிகளை பெருந்தோட்ட பகுதிகளிலும் அரசாங்கம் விரைவாக முன்னெடுப்பது அவசியம். அத்துடன் கிளங்கன் வைத்தியசாலையில் 14 சடலங்களை மாத்திரம் வைக்கும் நிலை உள்ளது இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய பெருந்தோட்ட மக்கள் பெருமளவு நிதியை செலவிடும் நிலையும் உள்ளது. இதற்கும் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுப்பது அவசியம். குறிப்பாக மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் இதில் கவனம் செலுத்துவது அவசியம்.

அதேபோல் கிளங்கன்ட வைத்தியசாலையில் பீசிஆர் பரிசோதனை அறிக்கைகளும் தாமதமாகவே வெளியிடபடுகின்றன. இது குறித்தும் கவனம் செலுத்துவது அவசியம். ஆகவே பெருந்தோட்ட வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுப்பது அவசியம். என்றார்

இதன்போது 1000 ரூபா சம்பளவிடயம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

‘ஒரு சில தோட்ட நிர்வாகங்களே தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை நிறுத்தியுள்ளன. ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர் தேசிய சஙகத்திற்கு சந்தா பணத்தை அனுப்புமாறு தோட்ட தலைவர்கள் ஊடாக தொழிலாளர்கள் கோரியுள்ளனர். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளதால் இந்த சந்தாவிடயத்தில் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது. சந்தா பணத்தின் மூலமே தொழிலாளர்களின் உரிமைச் சார்ந்த விடயங்கள் பேசப்படும். ஆகவே சந்தாவை அறவிட சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாததால் சந்தாவை அறவிட முடியாது என சில கம்பனிகள் கூறியிருக்கின்றன. இதனை மையப்படுத்தி எதிர்காலத்தில் நீதிமன்றத்தையும் நடவேண்டி ஏற்படலாம்.’ என்றார்.

க.கிசாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles