கிளிநொச்சி மருத நகர்ப்பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று நேற்று முன்தினம் (04-06-2022) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த குழந்தை வாய்க்காலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சமயம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளளது. உயிரிழந்த குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் வழமையாக பெற்றோர்கள் உறவினர்கள் நீராடுவது வழக்கம் இந்த நிலையில் குறித்த குழந்தையும் இவ்வாறு வாய்க்காலுக்கு சென்று நீரில் மூழ்கி உள்ளதாக அறிய முடிகின்றது.
