வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் வாரியபொல பிரதேச சபைத் தலைவரால் அனுதாப பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ராஜா கொல்லுரேவின் படத்துக்கு பதிலாக உயிருடன் இருக்கும் ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. பெயர் விவரம் சரியாக எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பான ‘பெனர்’ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.