” உலகில் நடைபெறும் சமர்களில் வாழ்வதற்கான சமர் – போராட்டமே பாரதூரமானது – பயங்கரமானது, அந்த சமரிலேயே இலங்கை மக்கள் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.” – என்று எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை மக்களுக்கு யோசிப்பதற்கு நேரமில்லை , வலி சுமந்த வாழ்க்கையையே வாழ்கின்றனர், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஆக வாழ்வதற்காகவும் போராட வேண்டியுள்ளது. இனவாத சமர், குல சமர், நாடுகளுக்கிடையிலான சமர் என இவ்வுலகில் சம சமர்கள் உள்ளன, ஆனால் இவற்றையெல்லாம் விடவும் வாழ்வதற்கான சமரே – போராட்டமே பயங்கரமானது. அந்த போராட்டத்தில்தான் நாம் ஈடுபட்டுவருகின்றோம்.
தற்போதைய அரசியல் வெறுத்துவிட்டது, மக்கள் கண்ணீர் சிந்தாமல் வாழக்கூடிய யுகமே எமக்கு வேண்டும். நான் மக்கள் பக்கமே நிற்கின்றேன்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு நான் எந்தவொரு இடத்திலும் கோரியதில்லை.” – என்றார்.
