விசுவமடுவில் பதற்றம்! படையினர் – மக்கள் முறுகல் – நால்வர் காயம்!

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து , நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வானத்தை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமக்கள் சிலர் ,வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போது, அது கைகலப்பாக மாறிய நிலையில், இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதையடுத்தே, நிலைமையை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி சூடு நடத்தப்பட்டது என படை தரப்பு தெரிவிக்கின்றது.

எனினும், இராணுவம் அடாவடியில் ஈடுபட்டு, தம்மை தாக்கினர் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles