விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவர் பதவியை ஏற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தமது கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகிவிட்டு, கட்சி உறுப்புரிமையில் இருந்தகூட விலகாமல், மற்றுமொரு கட்சியில் பதவியை ஏற்றமை குறித்தே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்படும் என மொட்டு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விவகாரம் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், விஜேயதாச ராஜபக்ச அழைக்கப்பட்டு இது தொடர்பில் விளக்கம் கோரப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளராக விஜயதாச ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Articles

Latest Articles