இந்த ஆண்டு இறுதியில் சவூதி அரேபியா முதல் பெண்ணை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
சவூதியின் அல் கார்னியுடன் இணைந்து ரய்யானா பர்னாவி 10 நாள் திட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கவிருப்பதாக சவூதி பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனியார் விண்வெளி நிறுவனமான எக்சியோ ஸ்பேஸ் மூலம் இந்த வசந்தகாலத்தில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் அங்கமாகவே ஸ்பேஸ்எக்ஸ் ட்ரகன் விண்கலத்தில் இந்த இருவரும் விண்வெளி செல்லவுள்ளனர்.
சவூதி அரேபியாவில் பெண்கள் மீதான கண்டிப்பான கொள்கைகளை தளர்த்தும் முயற்சியில் அந்நாட்டில் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.