விபத்தில் 16 வயது சிறுவன் பலி!

களுவாஞ்சிக்குடி – கல்முனை பிராதன வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 16 வயதுடைய ரவீந்திரன் என்ற சிறுவனே  சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து களுவாஞ்சிக்குடி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், களுவாஞ்சிக்குடியில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles