கிளிநொச்சி – A9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
ம. யூட்பவிஷன் (வயது 29) , ச.காந்தீபன் (வயது 34) ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் மோட்டார் சைக்களில் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










