விபத்தில் இளம் தம்பதியினர் பலி!

அக்குரஸ்ஸ , சியம்பலாகொட – பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் மகடூர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான பாக்யா பொரலஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles