விபத்தில் தாயும் மகளும் உடல் நசுங்கி உயிரிழப்பு!

வவுனியா, கண்ணாட்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் கண்ணாட்டிப் பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்குச் செல்வதற்காகக் குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டுக்கு முன்பாக உள்ள வீதியில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி வேகமாகப் பயணித்த ஹண்டர் ரக வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.

விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே சாவடைந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி (வயது 36), அவரது மகளான சிவலோகநாதன் டினுசிகா (வயது 06) ஆகியோரே இதன்போது உயிரிழந்தனர்.

விபத்து இடம்பெற்ற போது ஹண்டர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தையடுத்து அவர்கள் தப்பிச் சென்ற நிலையில் இருவரை ஊர் மக்கள் துரத்திப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை, விபத்தையடுத்துப் பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தைச் சராமரியாகத் தாக்கிச் சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கும் முற்பட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான போக்குவரத்தும் சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டன.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles