வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார்.
டிப்பரும், கெப் ரக வாகனமும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த வைத்தியர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
