விமல் வீரவன்சமீது தாக்குதல் முயற்சி!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சமீது இன்று தாக்குதல் நடத்துவதற்கு நபரொருவர் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் 9 கட்சிகளின் கூட்டமொன்று இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்கு விமல் வீரவன்ச சென்றிருந்தார்.

அதன்பின்னர் பெலவத்தை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விமல் முற்பட்டார்.

இதன்போது நபரொருவர் விமலை தாக்க முற்பட்டார். விமலின் பாதுகாப்பு தரப்பினர் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்து விமல் வீரவன்ச வெளியேறினார்.

Related Articles

Latest Articles