விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – டி.வி.சானக்க

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கு தேவையான எரிபொருள் விமான சேவை நிறுவனத்திடம் கையிருப்பில் உள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

32 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் கடந்த வாரம் கட்டளைகளை வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles