விராட் கோஹ்லியின் மோசமான சாதனை……!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இந்திய துடுப்பாட்ட வீரர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது.

இதில் நேற்று நடைபெற்ற கடைசி ரி – 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ஓட்டங்கள் குவித்தது.

இதனையடுத்து 213 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ஓட்டங்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது.

இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

இதில் முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிவடைந்ததால், தொடர்ந்து 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. 2-வது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோஹ்லி டக் அவுட் ஆவது இது 35-வது முறையாகும். இதன் மூலம் இந்திய துடுப்பாட்ட வீரர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் சச்சினுடன் சமனில் இருந்த கோஹ்லி தற்போது அவரை முந்தி மோசமான சாதனையை படைத்துள்ளார்.

1. விராட் கோலி – 35 முறை
2. சச்சின் – 34 முறை
3. ரோஹித் சர்மா – 33 முறை

மேலும் சர்வதேச ரி – 20 போட்டிகளில் விராட் கோஹ்லி, தான் சந்தித்தமுதல் பந்திலேயே அவுட் ஆவது (கோல்டன் டக்) இதுவே முதல் முறையாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles