புதியதொரு பொது எதிரணி கூட்டணியை கட்டியெழுப்புவதற்குரிய ஏற்பாடுகள் அரசியல் களத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரியவருகின்றது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எதிரணிகளை ஓரணியில் திரட்டுவதே புதிய கூட்டணியின் பிரதான நோக்கமெனக் கூறப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அறுதிப்பெரும்பான்மையை பெறாத உள்ளுராட்சிசபைகளில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு எதிரணிகள் ஒன்றிணைந்தன.
எனவே, இந்த இணைவை பொது கூட்டணியாக தொடர்வதற்குரிய ஏற்பாடே தற்போது இடம்பெறுகின்றது.