பால் தேநீர் மற்றும் கொத்து உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி பால் தேநீர் விலை 10 ரூபாவாலும், பிளேன்டி விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் எனவும் மேற்படி சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக் ஷான் தெரிவித்தார்.
அத்துடன், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவாலும், சோறு மற்றும் கொத்து ரொட்டியின் விலை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளை, வற் வரி அதிகரிப்பால் எரிபொருள் விலையும் உயரும். இதனால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வற் வரி அதிகரிப்பால் இலத்திரனியல் உபகரணங்களின் விலைகளும் அதிகரிக்க உள்ளது. தொலைபேசி கட்டணம் உட்பட சேவைக் கட்டணங்களும் அதிகரிககவுள்ளன.