விலையேற்றத்தைக் கண்டித்து 20 நகரங்களில் ஜே.வி.பி. போராட்டம்!

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்றும், நாளையும் 20 பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு ஜே.வி.பி. திட்டமிட்டுள்ளது.

மஹரகம, கம்பஹா, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நுவரெலியா, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேன ஆகிய நகரங்களில் இன்றும்,

பாணந்துறை, காலி, அக்குரஸ்ஸ, பதுளை, குருணாகல், புத்தளம், ரிகிலகஸ்கட, பூண்டுலோயா, கதுறுவெல, மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நாளையும்  இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles