விழிப்புலனற்ற மாணவன் கண்டி மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலிடம்!

2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கண்டி மாவட்டத்தில் கலைப் பிரிவில், கெலி ஓயா ஸ்ரீ பிரஞ்ஞரதன மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற, விழிப்புலனற்ற மாணவரான திவங்க ரணபாகு முதலிடம் பிடித்துள்ளார்.

உடுநுவர, வேகிரிய பகுதியில் தாயின் பராமரிப்பில் ,வாடகை வீட்டில் வசித்துவரும் குறித்த மாணவன் தரம் 10 இல் கற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே திடீரென விழிப்புலனை இழந்துள்ளார்.

இதனால் வாய் மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றியே க.பொ.த சாதாரண தரப்பரீட்சையிலும் விஷேட சித்தி பெற்றுள்ளதோடு உயார்தரத்திலும் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாணவனிடம் சிறப்பாக பாடும் திறமையும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பயின்று உளவியல்துறை பேராசிரியராக வருவதே இலட்சியம் எனக் கூறியுள்ளார்.

பாடசாலை அதிபர் டப்பிளியூ.எம்.கே வீரசிங்க , ஆசிரியர்களான சனத்குமார, டீ.எம்.எம் சத்சரணி , ரேணுகா உள்ளிட்டவர்களுக்கு மாணவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles