விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் – நுவரெலியாவில் ஜனாதிபதி உறுதி!

மரக்கறி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதுகாப்பானதொரு எதிர்காலம் உருவாகும் வகையில் தமது அறுவடைகளுக்குரிய விலையை பெற்றுக்கொள்ளக்கூடிய முறைமையொன்றை தயாரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரக்கறிகள், பழவகைகள் மற்றும் ஏனைய பயிர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பது விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (21) நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வலப்பனை நகரில் சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்தார்.

அரச வங்கிக் கடன்கள் தங்களுக்கு நிவாரணத்தை பெற்றுத்தரும் வகையில் இல்லையென விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் அரச நிறுவனங்களில் பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அவற்றுக்கு நியமனங்களை பெற்று வருவோர் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்று வேறு மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். அதன் காரணமாக பிரதேச மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்து, அதனை பாடசாலையுடன் இணைத்து பாலம் ஒன்றிணை நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையினை ஜனாதிபதி, இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

நாளைய தினமே அது பற்றி ஆராய்ந்து விரைவாக அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். பிரதேச மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ரிக்கில்லகஸ்கட பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதிக்கு மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

வலப்பனை வைத்தியசாலைக்கு பிக்குகளுக்கான வாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணித்து தருமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அபேட்சகர் எஸ்.சதாசிவம், கந்தப்பளை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்குபற்றினார். வருகை தந்திருந்த பிரதேசவாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். ஜனாதிபதி க்கு ஆசிவேண்டி சமயக் கிரியைகளும் நடைபெற்றன.

தரம் வாய்ந்த விதை கிழங்குகள் பற்றாக்குறைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு விவசாயிகள் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்தனர். கந்தப்பளையிலிருந்து நுவரெலியா வரையில் வீதியின் இருபுறமும் ஒன்றுகூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி உரையாடினார்.

இயற்கை அழகிற்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் நுவரெலியா மாவட்டத்தில் சுற்றாடலை பாதுகாக்குமாறு நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். சுயதொழிலாக பெண்கள் சிலர் சேர்ந்து முன்னெடுத்து வரும் “பஜட் பெக்” மரக்கறி மற்றும் பழவகைகள் திட்டம் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழில் மற்றும் காணி உறுதிகள் இல்லாமையினால் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் எஸ்பி.திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles