அநுராதபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ நேற்றிரவு பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், விபத்தில் குழந்தைகளின் தந்தை தீகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியாதப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
