வீட்டுக்குள் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது

வீட்டுக்குள் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மவுசாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள, காட்டு மஸ்கெலியா தேயிலை உற்பத்தி நிலையம் அருகில் உள்ள வீடொன்றில் மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுகின்றது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு நேற்றிரவு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அந்த இடத்தை பொலிஸார் அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Related Articles

Latest Articles