வீதியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – லிந்துலை பொலிஸார் தீவிர விசாரணை!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து இன்று (10) காலை பச்சிளம் சிசுவொன்றில் சடலம், லிந்துலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கௌசல்யா, க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles