வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C58 ராக்கெட்

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு அமைப்பு புத்தாண்டின் முதல்நாளில் மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது.

சந்திரன் மற்றும் சூரியன் குறித்து ஆய்வு செய்யும் திட்டங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய இஸ்ரோ தற்போது, சூப்பர்நோவா (விண்மீன் வெடிப்பு) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எக்ஸ்போசாட்(XPoSat) என்னும் செயற்கைக் கோளை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் டிசம்பர் மாத இறுதியில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று இந்த எக்ஸ்போசேட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இதுதவிர காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன.

வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles