வெல்லம்பிட்டிய, லான்சியாவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வீட்டின் அறை ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.










