” வெளிநாட்டு சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் நாட்டு நலன் கருதி அவர் பின்னால் அணிதிரண்டுள்ளோம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” ரணில் விக்கிரமசிங்க என்ற பெருந்தலைவருக்கு பதவி முக்கியம் அல்ல. ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி என எந்த பதவியைக்காட்டியும் அவரை அடிபணிய வைக்க முடியாது. பதவிகள் இல்லாமல் வீட்டில் இருப்பார். ஆனால் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டார்.
நாம் ஏன் ரணிலின் பின்னால் நிற்கின்றோம் என சிலர் கேட்கின்றனர். வெளிநாட்டு சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத தலைவர்தான் அவர். இதுதான் பிரதான காரணம் என்பதை கூறிக்கொள்கின்றேன்.” – எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.










