வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – இரு மாதங்களில் 24 பேர் கைது

வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாதங்களிலும் சுமார் 173 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டிருந்த பணம் 126 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக சட்டவிரோத நிறுவனங்கள் மற்றும் முகவர்களிடம் பணம் வழங்குவதை தவிர்க்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான நபர்கள் தொடர்பில் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles