அம்பாறை மாவட்டம், காரைதீவு – மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 6 மாணவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் தொடரவுள்ளது.
13 பேருடன் பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 5 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 6 மாணவர்கள் மற்றும் சாரதி, உதவியாளர் உட்பட 8 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மத்ரசா பாடசாலை முடிந்து மாணவர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
அந்தப் பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இந்தப் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காணாமல்போன மாணவர்கள் அனைவரும் 12 – 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
