தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட லூல்கந்தூர கீழ் பிரிவு தோட்ட மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக ஆற்றை கடந்தே நகருக்கு சென்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் பாலமொன்றை அமைக்குமாறு பலமுறை உரியதரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை தமக்குரிய தீர்வு கிடைக்கவில்லையென தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நூல்கந்தூர கீழ் பிரிவு தோட்டமானது முதல் முதலில் தேயிலைசெடி நாட்டப்பட்ட பிரதேசமாக காணப்படுகின்ற போதிலும் இப்பகுதியில் எந்தவித அபிவிருத்தி திட்டமும் முறையாக இடம்பெறவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
லூல்கந்தூர கீழ் பிரிவு தோட்டத்திலிருந்து தெல்தோட்டை நகருக்கு செல்வதற்கான பிரதான பாதை காணப்படுகின்ற போதிலும் சுமார் 3 கிலோமீற்றர் நடந்துசெல்ல வேண்டுமென்பதால் குறுக்கு வீதியாக இந்த ஆற்றை கடந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றை கடந்து செல்வதற்கு சுமார் 1.5 கிலோமீற்றர் தூரமே நடக்கவேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.
லூல்கந்தூர கீழ் பிரிவு மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் ஆகியோர் இந்த ஆற்றை கடந்தே செல்கின்றனர்.
எனினும் மழைக்காலங்களில் பெரும் அச்சத்துடன் பயணிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி பாம்புகளால் அச்சுறுத்தலும் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் அதிகாரிகளுக்கு தெரிவித்து இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
