ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
